ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி

'விடுதலை' படத்தின் கதையின் நாயகனான சூரி, லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார். சூரியும், அவரது மனைவியும் ஓட்டளிப்பதற்காக மையத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு வாக்காளர் பட்டியலில் சூரியின் பெயர் இடம் பெறாமல் விடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதன் காரணமாக சூரி ஓட்டளிக்க முடியவில்லை. அவரது மனைவி மட்டுமே ஓட்டளித்தார்.

அது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சூரி, “என் ஜனநாயக உரிமையை செலுத்துவதற்காக வந்தேன். கடந்த எல்லா தேர்தல்லயும் என்னுடைய உரிமையை கரெக்டா செஞ்சிருக்கேன். ஆனா, இந்த தடவை இந்த பூத்துல என்னோட பேரு விடுபட்டு போச்சின்னு சொல்றாங்க. மனைவி ஓட்டு மட்டும் இருக்கு. இருந்தாலும் 100 சதவீதம் ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கலன்னும் போது ரொம்ப வேதனையா இருக்கு, மனசு கஷ்டமா இருக்கு. எங்க யாருடைய தவறு, எப்படி நடந்ததுன்னு தெரியலை. இருந்தாலும் ஓட்டு போட்டுட்டு, ஓட்டு போடுங்கன்னு சொல்றத விட, ஓட்டு போட முடியலையேன்ற வேதனையோட நான் சொல்றேன். எல்லாரும் தயவு செஞ்சு 100 சதவீதம் ஓட்டு போடுங்க. ரொம்ப முக்கியம், நாட்டுக்கு நல்லது. எல்லாரும் தவறாம உங்க வாக்கை செலுத்துங்க. நானும் அடுத்த தேர்தல்ல கண்டிப்பா என் வாக்கை செலுத்துவன்னு நம்பறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.