ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பீஷ்மா படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் நடிகர் நிதின், இயக்குனர் வெங்கி குடுமுலா கூட்டணியில் ஒரு புதிய படம் ஒன்று உருவாகி வந்தது. இந்த படத்திற்கு ' ராபின் ஹூட்' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீ லீலா நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்போது இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 20ம் தேதி கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.