இந்தியாவின் முன்னணி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிட்டுள்ள மேவ்ரிக் 440 அடிப்படையில் புதிய மேவ்ரிக் 440 ஸ்கிராம்பளர் (Mavrick 440 Scrambler) வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடுத்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் முதல் மாடலாக வெளியிடப்பட்டுள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மேவ்ரிக் மாடலுக்கு அடுத்தபடியாக இதன் அடிப்படையில் ஒரு ஸ்கிராம்பளர் மாடலானது வடிவமைக்கப்பட்டு வருவதை பெயருக்கான வர்த்தக முத்திரை பதிவு மேற்கொண்டுள்ள விபரம் வெளியாகி உள்ள நிலையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆன் ரோடு மற்றும் ஆப் ரோடு என இரு விதமான பயன்பாடுகளுக்கும் ஏற்றதாக வடிவமைக்கப்பட உள்ள இந்த ஸ்கிராம்பளர் மாடலானது முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பினை பெற்று இருக்கும். இருக்கையில் இருந்து டிசைன் அம்சங்கள் மற்றும் ஹேண்டில் பார் ஆனது மாற்றப்பட்டிருக்கலாம்.
மற்றபடி எஞ்சின் ஆப்ஷனில் தொடர்ந்து எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் Mavrick 440cc சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 27 bhp பவரையும் 36 Nm டார்க்கை வழங்கும் இதில் ஆறு வேக கியர்பாக்ஸ் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது.
சமீபத்தில் தான் ஹீரோ மேவ்ரிக் 440 பைக் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளதால் இந்த ஸ்கிராம்பளர் மாடல் ஆனது இந்த ஆண்டு வெளி வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளன அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.