சென்னை: போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர்சாதிக்குக்கு ஹவாலா கும்பலுடன் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோத சம்பாதித்த பணம் தொடர்பாக, அவரிடம் தொடர்புகொண்டவர்களிடமும் விசாரணை நடத்த தேசிய போதை பொருள் தடுப்புத்துறை தீவிரமாக செயலாற்றி வருகிறது. டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சூடோ பெட்ரின் என்கிற போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்த தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியான ஜாபர்சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் […]