காவியாக மாறிய தூர்தர்ஷன் லோகோ… தேர்தல் ஆணையத்திடம் கேள்வியெழுப்பும் மம்தா பானர்ஜி!

மத்திய அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி (Prasar Bharati), தனது இந்தி செய்தி சேனல் டிடி (தூர்தர்ஷன்) சேனலின் லோகோ நிறத்தை காவி நிறத்துக்கு மாற்றியிருப்பது பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் பிரதானப்படுத்தும் வண்ணம் எனக் கூறப்படும் காவி நிறத்தை டிடி நியூஸ் சேனல் லோகோவின் நிறமாக பிரசார் பாரதி மாற்றியிருப்பதற்கு பல்வேரு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.

தூர்தர்ஷன் (DD)

அந்த வரிசையில், 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், `பிரசார் பாரதி தற்போது பிரசார பிரதியாக மாற்றப்பட்டிருக்கிறது. லோகோ மட்டுமல்ல டிடி சேனல் முழுவதுமே காவிமயமாகியிருக்கிறது.

இது வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையம் எவ்வாறு இந்த தேர்தல் நடத்தை விதிமீறலை அனுமதித்தது எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

திரிணாமூல் காங்கிரஸ் | மம்தா பானர்ஜி

இதுகுறித்து மம்தா பானர்ஜி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “நாடு முழுவதும் பொதுத் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, தூர்தர்ஷன் லோகோ திடீரென காவி நிறத்துக்கு மாறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இது முற்றிலும் நெறிமுறையற்றது மற்றும் சட்டவிரோதமானது. மேலும் இந்த நடவடிக்கை, தேசிய பொது ஒளிபரப்பாளரின் பா.ஜ.க சார்பு பற்றி உரக்கப் பேசுகிறது. தேர்தல் நேரத்தில் இத்தகைய காவி சார்பு தேர்தல் நடத்தை விதிமீறலை தேர்தல் ஆணையம் எப்படி அனுமதித்தது. தேர்தல் ஆணையம் இதை உடனடியாகத் தடுத்து, தூர்தர்ஷன் லோகோவை மீண்டும் நீல நிறத்துக்கு மாற்றியமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.