மோடி ஆட்சியில் ‘ரயில் பயணம்’ தண்டனையாகிவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சாதாரண ரயில்களை குறைத்து ‘எலைட் ரயில்களை’ மட்டுமே ஊக்குவிக்கும் மோடி அரசால் ஒவ்வொரு வகைப் பயணிகளும் துன்புறுத்தப்படுகிறார்கள். “தனது கொள்கைகளால் ரயில்வே துறையை நாசமாக்கி திறமையற்ற அரசு என மோடி அரசு நிரூபித்து வருவதுடன் அதை தனது நண்பர்களுக்கு விற்க காரணத்தை உருவாக்கி வருகிறது. இந்த திறமையற்ற அரசால் ரிசர்வ் செய்யப்பட்டவர்களுக்கு கூட ரயிலில் இருக்கைகள் கிடைப்பதில்லை, […]