தேர்தல் மைய பள்ளிகளை குப்பை கூளமாக்கிச் சென்ற அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுகாதாரத்தை பேணுவது குறித்து யூ.கே.ஜி. மாணவி ஒருவர் பாடமெடுத்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ம் தேதி நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த வாக்குப்பதிவுக்காக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பெற்றுது. வேட்பாளர்கள், வாக்குச்சாவடி விவரங்கள் உள்ளிட்டவை பள்ளி சுவர்களில் ஆங்காங்கே […]