திருவனந்தபுரம் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தனது தேர்தல் பிரசார உரையில் பாஜகவை சாடி உள்ளார். நேற்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், “பாஜகவின் தேர்தல் அறிக்கை வெறும் 14 நாட்களில் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதற்கு தலைப்பே இல்லை. மோடியின் வாக்குறுதிகள் என்று தான் அவர்கள் அழைக்கிறார்கள். தற்போது பாஜக அரசியல் கட்சியாக இல்லாமல் மோடியை வணங்கும் வழிபாட்டு முறையாக மாறி விட்டது. பிரதமர் மோடியின் வாக்குறுதி, தலைவர்களை வழிபடும் நாடுகளைத்தான் […]