கர்நாடக மாநிலம் பெலகாவியில் பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், ரபீக் என்பவர் அவரின் மனைவியின் கண்முன்னே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தன்னை மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும் புகார் அளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல் துறை இது குறித்து விசாரனை செய்து வருகிரது. பெலகாவி காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) பீமாசங்கர் குலேடா, “குற்றம்சாட்டப்பட்ட ரபீக்கும், அவரின் மனைவியும், குற்றம்சாட்டும் பெண்ணும், ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் 2023-ம் ஆண்டு, ரபீக் அவரின் மனைவி கண்முன்னே, புகார் அளித்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அந்தப் பெண்ணிடம் இஸ்லாம் மதத்துக்கு மாறுமாறும், புர்கா அணியுமாறும், குங்குமம் வைக்கத் தடைவிதித்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பெண்ணுடன் இருந்த அந்தரங்கப் படத்தை வைத்துக்கொண்டு, மதம்மாற வேண்டும் இல்லையென்றால் அதை வெளியே பரப்பிவிடுவதாக மிரட்டினார்கள் என்றும் அந்தப் பெண் புகாரில் தெரிவித்திருக்கிறார். இந்தப் புகாரின் அடிப்படையில், கர்நாடக மத சுதந்திர உரிமைச் சட்டம், ஐடி சட்டம் மற்றும் எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் ஏழு பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY