தூர்தர்ஷன் செய்தி தொகுப்பாளர் லோபாமுத்ரா சின்ஹா நேரலையில் வெப்பநிலை குறித்த செய்தி வாசித்துக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென இருக்கையிலேயே மயங்கி விழுந்தார். நேரலையில் அவர் மயங்கி விழுந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேற்கு வங்கத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால், அதிக வெப்பத்தின் காரணமாக அவரது ரத்த அழுத்தம் குறைந்து, மயக்கமடைந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அதன்பின் தனது உடல்நிலை குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்து கொண்டார். “ஏப்ரல் 18 அன்று காலை நேரலையில் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. மிகவும் சூடாக இருந்தது. என் ரத்த அழுத்தம் குறைந்தது. நான் மயங்கி விழுவதற்கு முன்பே உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். ஃப்ளோர் மேனேஜரிடம் தண்ணீர் (Floor Manager) கேட்டேன்” என்று வீடியோவில் கூறியுள்ளார்.
சுமார் 21 வருடங்களாகச் செய்தி தொகுப்பாளராகப் பணிபுரியும் இவர், வழக்கமாகத் தனது மேசையில் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பதில்லை. 30 நிமிட செய்தி வாசிப்பில் அவர் தண்ணீர் குடிக்காமலே செய்திகளைப் படித்து முடித்து விடுவார். ஆனால், அவர் மயங்கி விழுந்த அன்று நிலைமை வேறாக இருந்துள்ளது.
அங்கு ஏர் கண்டிஷனிங் இருந்தாலும் வெப்பநிலையில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தவில்லை. அன்று அவருக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்றியுள்ளது. ஆனால்,
வழக்கமாக அவர் செய்தி வாசிக்கும்போது, வீடியோ ஒளிபரப்பு இருக்கும். இதனால் இடையே கொஞ்சம் நேரம் இருக்கும். அன்று செய்திக்கான காணொளி காட்சிகள் ஏதும் இல்லை. ஒரு வேளை காணொளிக்கான காட்சிகள் இருந்திருந்தால் அந்த இடைவெளியில் அவர் தண்ணீர் குடித்திருப்பேன் என்று கூறியுள்ளார்.