Suriya: "தேவ் கராத்தேவுல மட்டுமில்ல ஒழுக்கத்துலயும் நம்பர் ஒன்தான்!" – நெகிழும் கராத்தே மாஸ்டர்

நடிகர் சூர்யா மகன் தேவ் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கி சாதனை படைத்துள்ளார்.

ஜென் கராத்தே அகாடமியின் பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்வுக்கு, ஒரு தந்தையாக சூர்யா நேரில் சென்று ரசித்ததோடு, சக மாணவர்களையும் பாராட்டியது பலரையும் கவனிக்க வைத்திருக்கிறது. இதுகுறித்து, சூர்யா மகன் தேவ்வின் கராத்தே மாஸ்டர் ‘ஹன்சி’ கேரிபாலாவிடம் பேசினேன்…

மகன் தேவ்வுடன் சூர்யா

“கடந்த ஒன்பது வருடமா தேவ் என்கிட்டதான் கராத்தே கத்துக்கிட்டு வர்றார். அவரோட ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் கராத்தே க்ளாஸ் வந்ததைப் பார்த்துதான், தேவ்க்கும் ஆர்வம் வந்துடுச்சு. சூர்யா சாரும் மகனோட விருப்பத்தை சந்தோஷமா நிறைவேற்றினார். இந்த ஒன்பது வருடத்துல, தேவ் கராத்தே க்ளாஸை மிஸ் பண்ணினதே கிடையாது. ரொம்ப ஆர்வமா எஞ்சாய் பண்ணிக் கத்துக்கிட்டார்.

சில மூவ்மென்ட்ஸ் கத்துக்க சிரமமா இருந்துச்சுன்னா, என்ன பண்ணா ஃபர்பெக்ட்டா வரும்னு அதுக்கான முயற்சியை ரொம்ப சின்சியரா எடுப்பார். சூர்யா சாரோட மகன்ங்கிறதுக்காக இப்படிச் சொல்லல. உண்மையிலேயே இப்படியொரு ஆர்வமான மாணவர் கிடைச்சதுக்கு, ஒரு மாஸ்டரா நான் லக்கின்னுதான் சொல்லணும். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேசியளவிலான கராத்தே போட்டியில் ரெண்டு ஈவென்ட்ல முதலிடம் வந்து, எங்க அகாடமிக்கு பெருமை சேர்த்தார். ரொம்ப திறமையான மாணவர்.

மகன் தேவ்வுடன் சூர்யா

அதேமாதிரி, ஒழுக்கத்துலயும் நம்பர் ஒன் ஸ்டூடண்ட் தேவ்தான். பெரிய நடிகரோட மகன்ங்கிற மாதிரியான, எந்தவொரு ஆட்டிட்யூடையும் அவர்கிட்ட பார்க்கமுடியாது. மாஸ்டர்ங்கக்கிட்ட பணிந்து ரொம்ப மரியாதை கொடுப்பார். இத்தனை மணிக்கு க்ளாஸ்னா, கரெக்ட்டா அத்தனை மணிக்கு இருப்பார். க்ளாஸுக்கு வர்ற ஸ்டூடண்ட்ஸ்கிட்டேயும் ஃப்ரெண்ட்லியா பழகுறது மட்டுமில்லாம, ஸ்டூடண்ட்ஸ்க்கு நிறைய ஹெல்ப்பும் பண்ணுவார். இதனால தேவ்க்கு எல்லோர்கிட்டேயும் நல்ல பேருதான். சூர்யா சாரோட வளர்ப்புதான் இதுக்கெல்லாம் காரணம்.

கராத்தேவைப் பொறுத்தவரை, ஒவ்வொரு ஆறு மாசத்துக்கும் ஒய்ட் பெல்ட்லருந்து எல்லோ, கிரீன், ப்ளூ, ஆரஞ்ச், பர்ப்பிள், பிரவுன், பிளாக்ன்னு அடுத்தடுத்த ஸ்டேஜ்ஜுக்கு பெல்ட் கொடுப்போம். இப்போ, தேவ் ப்ளாக் பெல்ட் வாங்கி முடிச்சுட்டார். இன்னைக்கே அடுத்தக் கட்டத்தை நோக்கி திரும்பவும் க்ளாஸ் வந்துட்டார். 2019-க்கு முன்னாடி வரைக்கும் நேர்ல வந்துதான் கத்துக்கிட்டிருந்தார். சிலநேரம், நான் அவங்க வீட்டுக்கும் போய் சொல்லிக்கொடுப்பேன். கொரோனாவுக்குப் பிறகு, கடந்த ரெண்டரை வருடமா ஆன்லைன்லதான் கத்துக்கிறார்.

கராத்தே மாஸ்டர் ஹன்சி கேரிபாலா

நேற்று நடந்த விழாவுக்கு அப்பாவோட சூர்யா சார் நேர்ல வந்து, ஒரு தந்தையா கலந்துக்கிட்டது எங்க எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். ஒரு அப்பாவா, மகன் பிளாக் பெல்ட் வாங்குறதை பார்க்க வந்தவரு, எல்லா ஸ்டூடண்ட்ஸையும் பாராட்டினார். மிக முக்கியமா, அவர்கூட போட்டோ எடுத்துக்கணும்னு ஸ்டூடண்ட்ஸ் ஆசைப்பட்டாங்க. அவ்ளோ நேரம் ரொம்ப பொறுமையா நின்னு, அவங்களோட விருப்பத்தை நிறைவேற்றினார். ஸ்டூடண்ட்ஸும் அவங்க பெற்றோருகளும் பயங்கர ஹேப்பி. இதுக்காக, அவருக்கு எங்க அகாடமி சார்பா நன்றி தெரிவிச்சுக்கிறேன்” என்கிறார் உற்சாகமுடன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.