பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட பொதுமன்னிப்பு விளம்பரம் அதன் பொருட்களை விளம்பரப்படுத்தும் அளவுக்கு பெரியதாக இல்லாமல் பூதக்கண்ணாடி வைத்து தேடுமளவுக்கு சிறியதாக உள்ளதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அலோபதி மருத்துவத்தின் தரத்தை சீர்குலைக்கும் வகையில் பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் செய்வதாக குற்றம்சாட்டி இந்திய மருத்துவ சங்கம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவனர் ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குனர் பாலக்ரிஷ்ணா ஆகியோர் பொது மன்னிப்பு கோர உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. […]