IPL 2024 CSK vs LSG Dream11 Prediction: இன்று (ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை) இந்தியன் பிரீமியர் லீக் 39வது போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இடையேயில் நடக்கவுள்ளது. ஐபிஎல் லீக் போட்டி அதன் இரண்டாவது பாதியில் நுழைந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு பிளேஆஃப்களுக்கு தகுதி பெறும் போட்டியில் இரு அணிகளும் உள்ளன. சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இன்னும் ஏழு ஆட்டங்கள் உள்ளன. வரவிருக்கும் போட்டிகளில் முடிந்தவரை வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
ஐபிஎல் 2024 புள்ளி பட்டியல் விவரம்
ஐபிஎல் 2024 புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழு ஆட்டங்களில் நான்கு ஆட்டங்களில் வெற்றியும், மூன்று ஆட்டங்களில் தோல்வியும் என மொத்தம் 8 புள்ளிகள் பெற்று ஐபிஎல் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
மறுபுறம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஏழு ஆட்டங்களில் ஆடி நான்கு ஆட்டங்களில் வெற்றியும், மூன்று ஆட்டங்களில் தோல்வியும் என மொத்தம் 8 புள்ளிகள் பெற்று ஐபிஎல் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இரு அணிகளும் சமமான வெற்றி பெற்றிந்தாலும், ரன்-ரேட் அடிப்படையில் சென்னை அணி முன்னணியில் உள்ளது.
சிஎஸ்கே vs எல்எஸ்ஜி போட்டி தொடங்கும் நேரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதும் இன்றைய போட்டி இரவு 7.30 மணிக்கு சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கும். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
எம்.ஏ. சிதம்பரம் பிட்ச் நிலவரம்
சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் உள்ள ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் ரன் குவிப்பதற்கு நல்ல சூழ்நிலை அதிகமாக இருக்கிறது. இருப்பினும், போட்டிகள் தொடர்ந்து முன்னேறும் போது, படிப்படியாக விக்கெட் வேகம் குறையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும்.
கணிப்பு: சிஎஸ்கே vs எல்எஸ்ஜி அணிகள் விளையாடும் 11 வீரர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ்
முதலில் பேட்டிங் தேர்வு செய்தால்..: ருதுராஜ் கெய்க்வாட்(கேட்ச்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, சமீர் ரிஸ்வி, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(வ), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான்
முதலில் பவுலிங் தேர்வு செய்தால்..: ருதுராஜ் கெய்க்வாட் (கேட்ச்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (வ), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா
இம்பாக்ட் பிளேயர்: சமீர் ரிஸ்வி, ஷர்துல் தாக்கூர், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, மிட்செல் சான்ட்னர்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
முதலில் பேட்டிங் தேர்வு செய்தால்..: குயின்டன் டி காக், கே.எல். ராகுல்(w/c), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, மாட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்
முதலில் பவுலிங் தேர்வு செய்தால்..: குயின்டன் டி காக், கேஎல் ராகுல்(டபிள்யூ/சி), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, மாட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொசின் கான், யாஷ் தாக்கூர், எம் சித்தார்த்
இம்பாக்ட் பிளேயர்: அர்ஷின் குல்கர்னி, கிருஷ்ணப்பா கௌதம், யுத்வீர் சிங், மணிமாறன் சித்தார்த், அர்ஷத் கான்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
அஜிங்க்யா ரஹானே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, சமீர் ரிஸ்வி, மொயீன் அலி, எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா, ஷர்துல் தாக்கூர் ரஷீத், நிஷாந்த் சிந்து, மிட்செல் சான்ட்னர், டேரில் மிட்செல், ஆரவெல்லி அவனிஷ், மகேஷ் தீக்ஷனா, ஆர்எஸ் ஹங்கர்கேகர், சிமர்ஜீத் சிங், முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் சோலங்கி, அஜய் ஜாதவ் மண்டல், ரிச்சர்ட் க்ளீசன்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி
குயின்டன் டி காக், கேஎல் ராகுல்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, மாட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர், அர்ஷின் குல்கர்னி, கிருஷ்ணப்பா கவுதம் சிங் சரக், மணிமாறன் சித்தார்த், அர்ஷத் கான், பிரேரக் மன்கட், அமித் மிஸ்ரா, கைல் மேயர்ஸ், ஷமர் ஜோசப், ஆஷ்டன் டர்னர், நவீன் உல் ஹக், தேவ்தத் படிக்கல், மயங்க் யாதவ்.
மேலும் படிக்க – பேராசை பெரும் நஷ்டம்! போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி?