சென்னை முஸ்லிம்கள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய மோடி மீது நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் என கி வீரமணி கூறியுள்ளார். இன்று திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய தேர்தல் சட்டப்படி, தேர்தல் பிரச்சாரத்தில் ஜாதி, மதம், கடவுள்களை முன்னிறுத்திடக் கூடாது. அப்படி மத, வகுப்பு உணர்வுகளை மய்யப்படுத்தி செய்யப்படும் தேர்தல் பிரச்சாரம் சட்டப்படி குற்றமாகும் (மக்கள் பிரதிநிதித்துவத் தேர்தல் சட்ட விதி 123(3) செக்ஷன்படி). அப்படி அவற்றைப் பயன்படுத்தி, தேர்தலில் வென்றாலும், […]