டெல்லி: மக்களவைக்கான 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் 26ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகளில் இன்று மாலை 6மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதில், ராகுல்காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் உள்பட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில், இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. 18வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, அதன்படி 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் […]