யவத்மால் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திடீரென மயங்கி விழுந்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இதில் முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் மகாராஷ்டிராவில், 5 கட்டங்களாகத் தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 19 ஆம் தேதி முதற்கட்டமாக, 5 தொகுதிகளுக்குத் […]