நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையை முடித்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கினால் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க முடியும்

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையை முடித்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கினால் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

33 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அடிப்படை உரிமைகள் தொடர்பான மனுவை சமர்ப்பித்து 14 மாதங்கள் ஆகியும் இன்று வரை பரீட்சை நடத்தப்படாததால் 22,000 ஆசிரியர்களை பணியமர்த்தும் வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் எதிர்வரும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டுமென எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

அத்துடன், மாகாண மட்டத்தில் 15,000 ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், மேல்மாகாணத்தில் தற்போது ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு வருவதாகவும் ஏனைய மாகாணங்களிலும் தேவையான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.