நைஜீரியா: சிறைகளை சேதப்படுத்திய கனமழை; 119 கைதிகள் தப்பியோட்டம்

அபுஜா,

நைஜீரியா நாட்டின் நைஜர் மாகாணத்தின் வடமத்திய பகுதியில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு அந்த பகுதியில் கனமழை பெய்தது. இதில், சிறையின் சில பகுதிகள் பலத்த சேதமடைந்தன.

இதனை பயன்படுத்தி சிறையில் இருந்து 119 கைதிகள் தப்பி சென்றனர். இதுபற்றி தகவல் தெரிந்ததும் போலீசார் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ பகுதிக்கு சென்றனர்.

போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியதில், தப்பி சென்ற கைதிகளில் 10 பேர் மீண்டும் பிடித்து வரப்பட்டனர். அவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சமீப ஆண்டுகளாக நைஜீரியாவில், சிறைகளில் இருந்து கைதிகள் தப்பும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இதனால், நாட்டிலுள்ள சிறைச்சாலையின் வசதிகளை தணிக்கை செய்வது என்றும் அதன் பாதிப்புகளை சரி செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.