சென்னை தமிழக அரசு சென்னை மெரினாவில் சுதந்திர தின அருங்காட்சியகம அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் 75-வது சுதந்திர தினவிழா உரையின் போது அறிவித்தார். சென்னை மெரினா கடற்கரையின் எதிரில், பாரம்பரியக் கட்டடமான ஹுமாயூன் மஹால் கட்டடத்தில் சுமார் 80,000 சதுர அடி […]