சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டலக் கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. 26.04.2024 முதல் 29.04.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 30.04.2024 மற்றும் 01.05.2024: மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். […]