கொல்கத்தா,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் மோதி வருகின்றன. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது.
262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர்.
இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரப்சிம்ரன் சிங் 54 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில் ஜானி பேர்ஸ்டோ தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 45 பந்துகளில் சதம் விளாசினார்.
Related Tags :