சென்னை நாளை முதல் திநகர் உஸ்மான் சாலையில் ஒரு வருடத்துக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இன்று சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் (நாளை) 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்குப் பின்வரும் போக்குவரத்து மாற்றுப்பாதைகள் செயல்படுத்தப்படும். * வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் […]