`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' – அமெரிக்க போலீஸ் தாக்குதல்… மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter’ என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது.

அமெரிக்கா – போராட்டம்

இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து, தரையில் தள்ளி கழுத்தில் முட்டியால் பலமாக அழுத்தியிருக்கின்றனர். அப்போது பிராங்க் டைசன் மூச்சு பேச்சின்றி சுயநினைவை இழந்தார்.

இந்த தாக்குதல் தொடர்பாக இணையத்தில் பரவி கொண்டிருக்கும் வீடியோ பலரையும் கொதிப்படையச் செய்திருக்கிறது. போலீஸ் அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவில் பதிவான அந்த வீடியோவில், `போலீஸ் அதிகாரிகள் பிராங்க் டைசனை பாருக்குள் துரத்திப் பிடிக்கின்றனர். `என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள்’ என்று அவர் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தார். இருப்பினும், பிடியைத் தளர்த்தாத போலீஸார், பிராங்க் டைசனை கீழே தள்ளினர். அதேவேளையில், ஒரு அதிகாரி அவரின் தலையைப் பலமாக தன் முட்டியால் அழுத்திக் கொண்டிருந்தார்.

`என்னால் மூச்சு விடமுடியவில்லை, காலை எடுங்கள்’ என்று திணறியவாறே அவர் கூறிக்கொண்டிருந்தார். இருப்பினும், அவரின் கைகளைப் பின்பக்கமாக வளைத்து கைவிலங்கு போடும் வரை அந்த அதிகாரி காலை எடுக்கவேயில்லை. இறுதியில் கைவிலங்கு போட்ட பிறகே அந்த அதிகாரி தனது காலை எடுத்தார். பிராங்க் டைசன் மூச்சு பேச்சின்றி தரையில் கிடந்தார்’.

ஜார்ஜ் ஃபிளாய்ட்

பின்னர், சில அதிகாரிகள் அவர் மூச்சு விடுகிறாரா… அவருக்கு துடிப்பு இருக்கிறதா… என்று பார்த்தனர். ஆனால், எந்தவொரு ரியாக்சனும் இல்லை. அதையடுத்து அங்கு வந்த துணை மருத்துவர்கள் அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அங்கு, பிராங்க் டைசன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், இறப்புக்கான காரணம் என்னவென்பதை அதிகாரிகள் தரப்பு இன்னும் வெளியிடாமல் இருக்கின்றனர். பிராங்க் டைசனின் இந்த மரணம், இன்னும் எத்தனை ஜார்ஜ் ஃபிளாய்ட்… எனப் பலரையும் கேள்வியெழுப்பவைத்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.