பெங்களூரு கர்நாடக மாநிலம் சம்ராஜ்நகர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் வரும் 29 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அடுத்தகட்ட வாக்குப்பதிவு வரும் மே 7-ந்தேதி நடைபெற உள்ளது. நேற்று கர்நாடகாவின் சம்ராஜ்நகர் தொகுதிக்கு உட்பட்ட ஹானூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவின்போது இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சேதப்படுத்தப்பட்டது. அங்குள்ள இண்டிகானத்தா […]