இஷான் கிஷானுக்கு மீண்டும் அபராதம் விதித்த பிசிசிஐ! ஏன் தெரியுமா?

Delhi Capitals vs Mumbai Indians: டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் இஷான் கிஷனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி முடிந்த சில மணி நேரங்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடப்பட்ட அறிக்கையில், இஷான் கிஷன் குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் போட்டி நடுவரின் உத்தரவை ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்துள்ளது. ஐபிஎல் நடத்தை விதி 2.2 இன் கீழ் நிலை 1 குற்றத்தை செய்ததாக பிசிசிஐ குற்றசாட்டு வைத்துள்ளது. 

மைதானத்திற்கு வெளியே விளம்பர பலகைகள், டிரஸ்ஸிங் ரூம் கதவுகள், கண்ணாடிகள், ஜன்னல்கள் மற்றும் பிற பொருட்களை சேதப்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும். இருப்பினும், இஷான் கிஷன் என்ன செய்தார் என்பதையும், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் போட்டியின் போது நடந்ததா என்பதையும் பிசிசிஐ சரியாகக் குறிப்பிடவில்லை. ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடி ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 257/4 என்ற இமாலய இலக்கை மும்பைக்கு வைத்தது. இதனை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அதிர்ச்சிகரமான தோல்வியை சந்தித்து.  

டெல்லி வீரர் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் 15 பந்துகளில் அரைசதம் அடித்து அதிவேக ஐபிஎல் அரைசதம் என்ற தனது சொந்த சாதனையை சமன் செய்தார். ஜஸ்பிரித் பும்ராவின் ஓவரில் 18 ரன்கள் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.  டெல்லி கேப்பிடல்ஸ் பவர்பிளே முடிவில் 92/0 என்ற வலுவான நிலையில் இருந்தது.  ஃப்ரேசர்-மெக்குர்க் 27 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து பியூஷ் சாவ்லாவிடம் அவுட் ஆனார். அபிஷேக் போரல் 27 பந்துகளில் 36 ரன்களில் முகமது நபியிடம் அவுட் ஆனார்.  ஷாய் ஹோப் 17 பந்துகளில் 41 ரன்கள் அடித்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 48 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

pic.twitter.com/Gj4GpGUVWk

— Delhi Capitals (@DelhiCapitals) April 28, 2024

மும்பை அணி பவர்பிளேயில் 60 ரன்களுக்கு மேல் எடுத்தது, ஆனால் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற முக்கியமான விக்கெட்களை அடுத்தடுத்து இழந்தது. கேப்டன் ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார். திலக் வர்மா மற்றும் டிம் டேவிட் 29 பந்துகளில் 70 ரன்கள் அடித்தும் மும்பை அணி 247/9 என்ற ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது, இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மும்பை இந்தியன்ஸ் 9 போட்டியில் விளையாடி 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.