2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு வெற்றிகரமாக செயல்பட முடியாததனால் அரசாங்க பல்கலைக்கழகங்களின் கட்டமைப்பில் பாரிய தொழில் முரண்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. 2022 ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை இப்பிரச்சனைக்கு பொருத்தமான அரசாங்க பல்கலைக்கழக கட்டமைப்பில் தரம் 12 காக இம் முரண்பாட்டை தீர்ப்பதற்கு அவசியமான அமைச்சரவை தீர்மானம், அதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை மற்றும் தொழிற்சங்கங்களுடனான, கலந்துரையாடலின் பின்னர் 2024.04.01 அன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்கலைக்கழக கட்டமைப்பில் கல்வி சாரா ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு கல்விசார் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுடன் விகிதாசார ரீதியில் பொருந்தக்கூடியதாக காணப்பட வேண்டிய கொடுப்பனவு 2024.01.01 ஆம் திகதி கல்வி சாரா ஊழியர்களுக்கும் வழங்குவதற்கு அவசியமான அமைச்சரவைக்கான யோசனை 2024.04.10 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ் அமைச்சரவை குறிப்புகள் 2024.05.08 அன்று அமைச்சரவை உபயோகிக்கு சமர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.