சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுகும் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளாதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பொது மக்களை கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. கடும் வெப்ப அலை வீசுவதால், பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வருகிறார்கள். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றும், 109 டிகிரி வரை வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் சென்னை […]