ஆபாச வீடியோ விவகாரம்: பிரஜ்வல் ரேவண்ணாவை சஸ்பெண்ட் செய்த JDS; தாமாக முன்வந்த தேசிய மகளிர் ஆணையம்!

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் கூட்டணி அரசியலே ஒரு பேசுபொருளாகவே உருவானது. காரணம், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வை எதிர்த்துவந்த மதசார்பற்ற ஜனதா தளம், பா.ஜ.க-வோடு கரம் கோர்த்ததுதான். கட்சிப் பெயரிலேயே மதசார்பற்ற ஜனதா தளம் என்று வைத்துவிட்டு, முழுக்க முழுக்க இந்துத்துவாவை முன்னிறுத்தும் பா.ஜ.க-விடம் தேர்தல் ஆதாயத்துக்காக கூட்டணி வைப்பதா என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாடின. இப்படியிருக்க, முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் பெயரில் பாலியல் வீடியோக்கள் வெளியாகியிருப்பது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு, பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அமித் ஷா – பிரஜ்வல் ரேவண்ணா

மேலும், பா.ஜ.க முக்கிய நிர்வாகி ஒருவர் கடந்த ஆண்டே இந்த வீடியோ விவகாரம் குறித்து பா.ஜ.க தலைமைக்கு கடிதம் எழுதியிருந்த தகவலும் தற்போது வெளியாகி இந்த விவகாரத்தை தீவிரப்படுத்தியிருப்பதால், தேர்தலில் பா.ஜ.க-வுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று பேசப்படுகிறது. இதுபோன்ற பேச்சுக்கள் எழுந்ததும், “இது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை. மாநில அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்… எங்கள் அரசு இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆதரவாக இருக்கும். சம்பந்தப்பட்ட கட்சியில் முக்கிய கூட்டம் ஒன்று நடக்கவிருக்கிறது. அதில் சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்” என மத்திய உள்துறை அமித் ஷா கூறிவிட்டார்.

இன்னொருபக்கம், கர்நாடக அரசும் இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணையும் நடத்தி வருகிறது. இத்தகைய சூழலில், பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தொடர்பாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று கூடியது. இதுகுறித்து பேசிய கட்சியின் கோர் கமிட்டி தலைவர் ஜி.டி.தேவகவுடா, “பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். இந்தக் குழுவின் விசாரணை முடியும் வரை பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்ய எங்கள் கட்சியின் தேசிய தலைவருக்குப் பரிந்துரை செய்ய முடிவு செய்திருக்கிறோம்” என்று கூறினார்.

ஹெச்.டி.குமாரசாமி

இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து கட்சியின் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி, “சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை முடியும் வரை பிரஜ்வல் ரேவண்ணாவின் இடைநீக்கம் நீடிக்கும்” என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. இதுதொடர்பாக, தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, கர்நாடக டி.ஜி.பி-க்கு கடிதமும் அனுப்பியிருக்கிறார்.

தேசிய மகளிர் ஆணையம் – அறிக்கை

அந்த அறிக்கையில், “ஹாசன் தொகுதியின் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ கிளிப்புகள் தொடர்பாக வெளிவந்த ஊடக அறிக்கைகளை தேசிய மகளிர் ஆணையம் கவனித்திருக்கிறது. இந்தச் சம்பவத்தை தேசிய மகளிர் ஆணையம் வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய நிகழ்வுகள் பெண்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களுக்கெதிரான அவமரியாதை மற்றும் வன்முறை கலாசாரத்தை வளர்க்கிறது. நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற குற்றவாளி உடனடியாகக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம். அதோடு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கை மூன்று நாட்களுக்குள் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என்று

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.