அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயில், ஏத்தாப்பூர், சேலம் *திருவிழா* தை மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்ஸவம். *தல சிறப்பு* இத்தலத்தில் சுவாமியுடன், மகாலட்சுமி அரூபலட்சுமியாக (உருவம் இல்லாமல்) அருளுகிறாள் என்கின்றனர். இதனால் சுவாமி “லட்சுமி கோபாலர்’ என்று அழைக்கப்படுகிறார். *பொது தகவல்* பிரகாரத்தில் வேதவல்லி தாயார் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இங்குள்ள ஆஞ்சநேயரை “அருள்தரும் ஆஞ்சநேயர்’ என்கின்றனர். இவர் தனது வாலை தலை மீது வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். பிரகாரத்தில் ஆழ்வார்கள் சன்னதி மட்டும் இருக்கிறது. இத்தல […]