நடப்பு ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியசாத்தில் தோல்வியைத் தழுவியது.
ஏழாவது தோல்வியைப் பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. தோல்வி குறித்து முக்கியமான சில விஷயங்களை கேப்டன் ஹர்திக் பாண்டியா பகிர்ந்திருக்கிறார்.
இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து அவர் பேசியிருப்பது, “பவர்பிளேவில் விக்கெட்டுகள் விழுந்தவுடன் அதிலிருந்து மீண்டு வருவது கடினமாக இருந்தது. பவர் பிளேவில்தான் நாங்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்திருக்க வேண்டும். ஆனால் எங்களால் அது முடியாமல் போய்விட்டது. மற்ற அணிகள் அதிரடியாக ஆடுவதால் எங்களுக்கும் நெருக்கடி ஏற்படுகிறதா என்று கேட்கிறீர்கள். ஆனால் அப்படி கிடையாது.
எங்களைப் பொறுத்தவரை பந்தைப் பார்த்தால் அதனை அடிக்க வேண்டும். ஆடுகளும் நன்றாகதான் இருந்தது. நாங்கள் பெரிய ஷார்ட் ஆடும் வகையில்தான் அனைத்துமே அமைந்தது. ஆனால் இந்தப் போட்டியில் நாங்கள் சிறப்பாகத் தவறவிட்டோம். இந்த சீசன் முழுவதுமே பேட்டிங் எங்களுக்கு மோசமாக அமைந்திருக்கிறது.
நாம் ஆடுகளத்தில் காலடி வைக்கும் போது சில சமயம் தோல்வியைத் தழுவுவோம். சில சமயம் வெற்றி கிடைக்கும். ஆனால் எப்போதுமே களத்தில் போராட வேண்டும். சண்டை செய்ய வேண்டும். இந்தப் போட்டி எங்களுக்கு பாதகங்களை கொடுத்தாலும் இதன்மூலம் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்வியின் காரணமாக நீங்கள் நினைப்பதை கமென்ட்டில் பதிவிடுங்கள்!