பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணி உரிமை, வீட்டு உரிமை வழங்கப்படும்   மனுஷ நாணயக்கார

தொண்டமான்கள்தான் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தார்கள் என்றும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு தொண்டமான்கள்தான் தொடர்ந்து குரல் கொடுத்தார்கள் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (01) கொட்டக்கலையில் நடைபெற்ற   இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  மே தின கூட்டத்தில் தெரிவித்தார்

பெருந்தோட்டத் தொழிலாளர்களை கவனத்தில் கொண்ட தரப்பினர் உரிய முறையில் செயற்படாவிட்டால் அதற்கான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

“என்னை அரசியலுக்கு அழைத்து வந்தவர் ஆறுமுகன் தொண்டமான்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இருந்து அரசியலை ஆரம்பித்து இன்று நாட்டின் தொழில் அமைச்சரானேன். உங்களிடமிருந்தும், உங்கள் தலைவரிடமிருந்தும் நான் கற்றுக்கொண்ட அரசியலால் தான் தற்போது தொழில்  அமைச்சராக உழைக்கும் மக்களுக்காக உழைக்க முடிந்துள்ளது.

இன்று  ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் ஜீவன் தொண்டமானுடன் ஒரு அமைச்சராக  இணைந்து நாட்டை வீழ்ந்த இடத்திலிருந்து முன்னேற்றி   மக்கள் வரிசையில் நிற்கும் யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தோம்.

ரணில் விக்கிரமசிங்க, ஜீவன் தொண்டமான், செந்தில் தொண்டமான் ஆகியோர் எரிவாயுவு,எரிபொருள் வரிசையில் நிற்காமல் மீண்டும் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கினார்கள்.

இப்பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எப்பொழுதும் அழுத்தத்தில் இருந்தனர். ஆனால் அந்த நேரங்களிலெல்லாம் தொண்டமான்கள் இந்த மக்களுக்காக நின்றார்கள். இம்மக்களுக்கு  சமூக உரிமை வழங்கப்பட்ட போது சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமை தாங்கினார்.

ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் இணைந்து மக்களுக்காக உழைத்தார். இன்று செந்தில் தொண்டமான், ஜீவன் தொண்டமான் ஆகியோர்கள் மக்களின் உரிமைகளுக்காக அனைத்து  அர்பணிப்புக்களையும்  செய்து வருகின்றனர்.

இந்த சம்பள அதிகரிப்பை எப்படியாவது செய்துதர  வேண்டும் என  ஜீவன் தொண்டமான், செந்தில் தொண்டமான், ரமேஷ், மாரிமுத்து ஆகியோர் பலத்த அழுத்தம் தந்தார்கள் . சம்பள அதிகரிப்பு மே மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளப்படும் என தெரிவித்த ஜனாதிபதி
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தக் குறைந்தபட்ச சம்பளமாக1700  ரூபவாக  அறிவித்துள்ளார்.

இப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டுரிமை மற்றும் காணி உரிமைகளை வழங்குவதற்கு  ஜனாதிபதி தீர்மானம் எடுத்துள்ளார் .  நிச்சயமாக நாங்கள் இவற்றையெல்லாம் உங்களுக்கு  நிறைவேற்றித் தருவோம் ” என  அமைச்சர்  கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.