ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்?
நடிகர் ரஜினிகாந்த் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இதுவரை 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது வேட்டையன், கூலி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சாஜித் நடியாவலா ரஜினிகாந்தை சந்தித்து பேசிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அப்போது ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை அவர் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. இப்போது இப்படத்தை சாஜித் தயாரிப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.