குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பஞ்சாப் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி கோல்டி பிரர், அமெரிக்காவின் கலிபோர்னியா ஹோட்டலில் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அச்செய்தியை இந்திய உளவுத்துறை இன்னும் உறுதிபடுத்தவில்லை. கோல்டி பிரர் பஞ்சாப் மற்றும் கனடாவில் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபட்டுள்ளான். கலிபோர்னியா ஹோட்டலில் இரண்டு பேர் கோல்டி பிரருடன் சண்டையிட்டதாகவும், அதனை தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றதாகவும் செய்தி வெளியானது. ஆனால் இச்செய்தி உண்மையில்லை என்று அமெரிக்க போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அமெரிக்க போலீஸ் அதிகாரி வில்லியம் கூறுகையில், ”கோல்டி பிரர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக வெளியான செய்தியில் எந்த வித உண்மையும் இல்லை. இது தொடர்பான தவறான தகவலால் உலகம் முழுவதும் இருந்து அமெரிக்க போலீஸாரிடம் தகவல் உண்மையா என்று கேட்டு விசாரணைகள் வந்து கொண்டிருக்கிறது. சம்பவத்தன்று கொலை செய்யப்பட்ட நபர் கோல்டி பிரர் கிடையாது. கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் சேவியர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் துப்பாக்கிச்சூடு நடந்தது உண்மைதான். ஆனால் அதில் கொலை செய்யப்பட்டது கோல்டி பிரர் கிடையாது என்று தெரிய வந்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs