சென்னை: தாம்பரத்தில் இருந்து கொல்கத்தா சந்த்ராகச்சி இடையே 2 வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இந்த ரயிலானது, எழும்பூர் வழியாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இதுதொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2 வாராந்திர சிறப்பு ரயில்கள் சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. சிறப்பு ரயில் 1 வண்டி எண் 06089 தாம்பரம் – சந்த்ராகச்சி வாராந்திர சிறப்பு ரயில், மே 8, 15, 22, 29ம் […]