Amazon Great Summer Sale ஆரம்பம்: இந்த சிறந்த ஸ்மார்ட்போன்களுக்கு செம தள்ளுபடி..!

Amazon Great Summer Sale Today: அமேசான் நிறுவனத்தின் கிரேட் சம்மர் சேல் (Amazon Great Summer Sale) விற்பனை இன்று (மே 2, 2024) மதியம் 12 மணிக்கு தொடங்கும். நீங்கள் பிரைம் உறுப்பினராக இருந்தால், நள்ளிரவு 12 மணி முதல் அமேசான் கிரேட் சம்மர் சேல் விற்பனையில் முன்கூட்டியே பல பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கி குவித்திருக்கலாம். ஆனாலும் நோ வெரி.. மதியம் 12 மணி முதல் தள்ளுபடி விலையில் உங்களுக்கு பிடித்த பிராண்டுகளை வாங்கலாம்.

அமேசான் கிரேட் சம்மர் சேலில், பல பிராண்டட் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டிவிகள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் மீது பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. அதேநேரத்தில் புதிய ஸ்மார்ட்போனைப் வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால், அதற்கான சரியான நேரமாக இது இருக்கலாம். ஏனென்றால் ஆப்பிள் ஐபோன், ஒன்பிளஸ், ஜியோமி மற்றும் சாம்சங் உள்ளிட்ட சிறந்த ஸ்மார்ட்போன்கள் அமேசான் கிரேட் சம்மர் சேல் விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கும். 

குறிப்பாக இந்த விற்பனை சாம்சங், ஆப்பிள், ஒன்ப்ளஸ், ஒப்போ, விவோ மற்றும் பிற பிரபல மாடல்களில் 43% வரையிலான தள்ளுபடிகளை வழங்குகிறது. இது உங்கள் பணத்தை அதிகம் செலவழிக்காமல்,  குறைந்த விலையில் நீங்கள் விரும்பிய ஸ்மார்ட்போன்கள் பெற தயாராகுங்கள்.

iPhone 15 Pro

ஐபோன் 15 ப்ரோ கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான ஆப்பிள் நிறுவனத்தின் உயர்நிலை ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போன் விற்பனையில் உள்ளது மற்றும் 5 சதவீத நேரடி தள்ளுபடியில் வழங்கப்படுகிறது, இதன் விலை 1,34,900 இலிருந்து 1,27,990 ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது. மேலும், உங்களிடம் Amazon Pay ICICI வங்கி கிரெடிட் கார்டு இருந்தால், கூடுதலாக ரூ.6,399 தள்ளுபடி கிடைக்கும். எனவே, விற்பனையின் போது iPhone 15 Pro இன் விலை ரூ.1,21,591 ஆக இருக்கும். ஐசிஐசிஐ வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்களுக்கும் சலுகைகள் உள்ளன. எனவே அவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

OnePlus 12

அமேசான் கிரேட் சம்மர் சேல் விற்பனையில் ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய முதன்மை சாதனமான ஒன்ப்ளஸ் 12 ஸ்மார்ட்போன் தள்ளுபடியில் கிடைக்கிறது. போனின் அசல் விலை ரூ.64,999. இருப்பினும், உங்களிடம் Amazon Pay ICICI வங்கி கிரெடிட் கார்டு இருந்தால், நீங்கள் ரூ.3,249 தள்ளுபடியைப் பெறலாம். இதன்மூலம் இது போனின் விலை ரூ.61,750 ஆகக் குறையும். ஐசிஐசிஐ வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டு பயனர்களுக்கு சலுகைகள் உள்ளன, 

Xiaomi 14

கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோமி 14 போனும் தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.79,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 நேரடி தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. இதமூலம் இதன் விலை ரூ.69,999 ஆக குறையும். இது தவிர, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு (அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு தவிர்த்து) ரூ.4250 நேரடி தள்ளுபடி உள்ளது. மற்ற வங்கிச் சலுகைகளும் உள்ளன. அதன்மூலமும் சலுகையை பெறலாம். 

Redmi Note 13 Pro+

ரெட்மீ நோட் 13 ப்ரோ பிளஸ் (Redmi Note 13 Pro+) ஆனது ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் முதலில் ரூ.33,999 விலையில் இருந்தது, ஆனால் எந்த வங்கி சலுகைகளும் இல்லாமல் ரூ.30,999க்கு விற்கப்படுகிறது. கூடுதலாக, Amazon Pay ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் ரூ. 2,946 தள்ளுபடியைப் பெறலாம். இதனால் போனின் விலையை ரூ.28,053 ஆகக் குறையும். சிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் ரூ.3,000 தள்ளுபடியையும் பெறலாம்.

Poco M6 Pro 5G

நீங்கள் ரூ.10,000க்குள் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களானால், போகோ எம்6 ப்ரோ 5ஜி‌ (Poco M6 Pro 5G) ஒரு நல்ல தேர்வாக இருக்கும். தற்போது, ​​இந்த போன் Amazon Great Summer Saleல் ரூ.9,499க்கு கிடைக்கிறது. ஆனால் கூப்பனைப் பெறுவதன் மூலம், நீங்கள் நேரடியாக ரூ.500 தள்ளுபடியைப் பெறலாம், இதன் விலை ரூ.8,999 ஆகக் குறையும்.

Samsung Galaxy M15 5G

இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி (Samsung Galaxy M15 5G) போன் ரூ.11,999க்கு விற்பனையில் கிடைக்கிறது. ஆனால் ரூ.10,699க்கு வாங்கலாம். எப்படி என்றால் இந்த போனுக்கு கிடைக்கும் ரூ.1300 கூப்பனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தவிர ரூ.11,350 எக்ஸ்சேஞ்ச் போனஸும் போனில் கிடைக்கும்

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.