சென்னை: கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் 6 நாள் சுற்றுலா சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், தனது விடுமுறை பயணத்தை ரத்து செய்துவிட்டு முன்கூட்டியே சென்னை திரும்புகிறார். அதிகரித்து வரும் வாகன நெரிசல், காட்டுத்தீ மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அவரது கொடைக்கானல் ஓய்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. நடப்பாண்டு கொளுத்தும் வெயில் காரணமாக கோடை வாசஸ்தலமான ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுகிகளிலும் எதிர்பார்த்த அளவுக்கு குளுகுளு சூழல் நிலவவில்லை. குறிப்பாக நீலகிரி மாவட்டம், ஊட்டி, குன்னூர் பகுதிகளில் வெயில் வாட்டி வருவதால், […]