சேலம்: சேலத்தில் மழை வேண்டி முஸ்லிம் மக்கள் சட்டையை திருப்பி அணிந்து கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகபட்சமாக 111 டிகிரி வரை வெயிலின் தாக்கம் பதிவாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வற்றி, வறண்டு காணப்படுகிறது. கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபட வேண்டியும், மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி பசுமையான சூழ்நிலை உருவாக வேண்டியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் சார்பில் இஸ்லாமியர்கள் சேலம் கோட்டை பகுதியில் திறந்தவெளியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் சட்டையை திருப்பி அணிந்து கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். சேலத்தில் மழை வேண்டி முஸ்லிம் மக்கள் சட்டையை திருப்பி அணிந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.