மே 9 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ள புதிய நான்காம் தலைமுறை மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் டீலர்களை வந்தடைய துவங்கியுள்ள நிலையில் பல்வேறு முக்கிய விபரங்கள், என்ஜின், மைலேஜ் என பல தகவல்கள் கிடைத்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட ஸ்விஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் Z12E மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக அதிகபட்சமாக 82 bhp மற்றும் 112 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கலாம்.
2024 ஸ்விஃப்டின் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் மைலேஜ் லிட்டருக்கு 25.72 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட சுமார் 3 கிமீ வரை கூடுதலான மைலேஜ் வெளிப்படுத்துகின்றது.
தோற்ற அமைப்பில் மேம்பட்ட முன்பக்க கிரில் மாறுபட்ட டிசைன் பெற்ற எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் இடம்பெற்றுள்ளது. கூடுதலாக பக்கவாட்டில் புதுப்பிக்கப்பட்ட அலாய் வீல் டிசைனுடன் சி பில்லர் சற்று மாற்றியமைக்கப்பட்டு நேர்த்தியானதாக உள்ளது.
9 அங்குல தொடுதிரை ஃப்ரீஸ்டாண்டிங் சிஸ்டத்தில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகளுடன் பல்வேறு சுசூகி கனெக்ட்டிவ் சார்ந்த வசதிகளும் இடம்பெற உள்ளது. பல்வேறு ஸ்மார்ட்போன் சார்ந்த இணைப்புகளுடன் வயர்லெஸ் சார்ஜிங் பேட், ஹெட்அப் டிஸ்பிளே மூலம் வேகம் , டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உள்ளிட்ட விபரங்களை திரையில் காணலாம்.
தற்பொழுது ஸ்விஃப்ட் காருக்கு முன்பதிவு நடைபெற்று வருவதனால் ரூ.11,000 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகின்றது. முழுமையான விலை பட்டியல் மற்றும் பல்வேறு தகவல்கள் மே 9 ஆம் தேதி வெளியாகும்.
image – harshvlogs/youtube