பஜாஜ் ஆட்டோவின் ஸ்போர்ட்டிவ் ரக பல்சர் பைக் வரிசையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பல்சர் NS400 Z பைக்கின் விலை ரூ.1,85,000 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் பிரசத்தி பெற்று விளங்குகின்ற என்எஸ் பைக்குகளின் அடிப்படையான டிசைன் வடிவத்தை பின்பற்றி தயாரிக்கப்பட்டுள்ள 373சிசி என்ஜின் பொருத்தப்பட்ட என்எஸ் 400 பற்றி முக்கிய விபரங்களை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.
கடந்த 2001 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பல்சர் மோட்டார்சைக்கிள் பிராண்டு தற்பொழுது 125சிசி-400சிசி வரை உள்ள பிரிவுகளில் கிளாசிக் ஸ்டைல், NS, N மற்றும் RS ஆகிய பிரிவுகளில் கிடைக்கின்ற நிலையில் ஒட்டுமொத்தமாக தற்பொழுது வரை 1,80,70,125 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.
எனவே, சர்வதேச அளவில் ஒவ்வொரு 20 வினாடிகளுக்கு ஒரு பல்சர் விற்பனை ஆகி வருகின்றது.
பஜாஜ் பல்சர் என்எஸ் 400 இசட்
டோமினார் 400 உட்பட முந்தைய டியூக் 390 பைக்குகளில் இடம்பெற்றிருந்த 373cc லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 40Ps (29.42Kw) பவர் மற்றும் டார்க் 35 Nm வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
போல்ட் வடிவ ரன்னிங் விளக்குடன் கூடிய எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் கொண்டுள்ள பல்சர் என்எஸ் 400ல் கருப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் கிரே என நான்கு விதமான நிறங்களை பெற்றுள்ளது.
320mm மற்றும் 230mm பின்புறத்தில் டிஸ்க் பிரேக் பெற்றதாக அமைந்துள்ள இந்த மாடலில் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்று 4 விதமான ரைடிங் மோடுகளாக (Road, Rain, Sport, Off-Road) ஆகியவை பெற்றுள்ளது.
ரைட் பை வயர் நுட்பம், டிராக்ஷன் கண்ட்ரோல் நுட்படத்துடன் அதிகபட்ச வேகம் மணிக்கு 154 கிமீ வரை பல்சர் NS400 Z எட்டும் என பஜாஜ் ஆட்டோ உறுதிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து, டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் கனெக்டிவிட்டி சார்ந்த வசதிகளை வழங்கும் வகையிலான பஜாஜ் ரைட் கனெக்ட் அம்சங்களில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ஸ்மார்ட்போன் இணைப்பின் மூலம் பல்வேறு அம்சங்களை பெற வழி வகுக்கின்றது.
முன்புறத்தில் அப்சைட் டவுன் ஃபோர்க் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது. பின்புறத்தில் மோனோசாக் சஸ்பென்ஷன் உடன் ஸ்பிளிட் சீட் ஆனது இணைக்கப்பட்டிருக்கின்றது.
2024 பஜாஜ் பல்சர் என்எஸ் 400 இசட் விலை ரூ.1.85 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகை விலை குறைந்த நாட்களுக்கு மட்டுமே தற்பொழுது முன்பதிவு கட்டணமாக ரூ.5,000 ஆக வசூலிக்கப்படுகின்றது. வரும் ஜூன் மாதம் டெலிவரி துவங்க உள்ளது.