கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டல்ல, அது ஒரு எமோஷன் என இந்தியாவில் கோடிக்கான கிரிக்கெட் ரசிகர்கள் தலைமுறை தலைமுறைகளாகக் கிரிக்கெட்டைக் கொண்டாடி வருகின்றனர்.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கிரிக்கெட்டைத் தீவிரமாகப் பார்த்து ரசித்து ஆதரவு தந்து வருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெருந்திருவிழாவாக இருப்பது ஐபிஎல் தொடர். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் தொடரைக் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். இதில் தோனிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அதுவும் இந்த ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானமே தோனியின் என்ட்ரியில் அதிர்ந்து கொண்டிருக்கிறது.
சிஎஸ்கே அணிக்கும், தோனிக்கும் கோடிக்கானக்கான ரசிகர்கள் மைதானத்தில் மட்டுமல்ல வீட்டிலிருந்தே படியே ஆதரவளித்து வருகின்றன. அந்தக் கோடான கோடி ரசிகர்களில் ஒருவர் தமிழ்நாட்டின் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 103 வயதான ராமதாஸ் என்பவர்.
இந்த வயது முதிர்ந்த காலத்திலும் ‘நான் சீனியர் யூத்’ என ஒவ்வொரு சிஎஸ்கே போட்டியையும் தவறாமல் பார்த்து வருகிறார். தோனியின் தீவிர ரசிகர். சிஎஸ்கே வீரர்களின் புகைப்படம் பார்த்தவுடனே சரியாக அடையாளம் கண்டுச் சொல்கிறார் . இந்த வயதிலும் உடல் நலக் குறைவுகள் இருந்தபோலும், மனம் விட்டு மகிழ்ந்து சிஸ்கே ஆட்டத்தைப் பார்த்து ரசிக்கிறார். சமீபத்தில் இவரது வீடியோ ஒன்று சிஎஸ்கே அணியின் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டு வைரலானது. அதில், ‘தோனியைப் பார்க்க வேண்டும். அவர் எப்போது அழைத்தாலும், எங்கு அழைத்தாலும் அவரை வந்து சந்திக்கத் தயார்’ என்று துடிதுடிப்புடன் பேசியது கவனத்தை ஈர்த்திருந்தது.
இந்நிலையில் ரமதாஸ் என்று அவரின் பெயர் போட்ட சிஎஸ்கே ஜெர்ஸியில் ‘உங்களின் ஆதரவிற்கு நன்றி, தாத்தா.. ‘ என்று எழுதி கிஃப்ட்டாகக் கொடுத்துள்ளார் தோனி. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.