பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கூடுதலாக வரவுள்ள குறைவான விலையில் வரவிருக்கும் சேட்டக் சிக் (Chetak Chic) மாடலில் விற்பனையில் உள்ள அர்பேன் மற்றும் பிரீமியம் ஆகியவற்றின் அடிப்படை டிசைனை பெற்று ஆனால் குறைந்த வதிகளுடன் வரவுள்ளது.
விற்பனையில் கிடைக்கின்ற மாடலை போலவே தோற்ற அமைப்பில் அமைந்திருக்கூடிய சேட்டக் சிக்கில் அலாய் வீல் மற்றும் டிஸ்க் பிரேக் நீக்கப்பட்டு ஸ்டீல் வீல் உடன் டிரம் பிரேக் இரு டயர்களிம் பெற்று கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை தர உள்ளது. அடுத்து, முதன்முறையாக 2020ல் வெளியிட்டதை போன்றே மோனோக்ரோம் வட்ட வடிவ டிஜிட்டல் டிஸ்பிளே உள்ளது.
முன்புற அப்ரானில் உள்ள பாக்கெட்டுகள் திறந்த நிலையில் உள்ளது. பேட்டரி மற்றும் மோட்டார் தொடர்பான விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை என்றாலும், சேட்டக் அர்பேனில் உள்ள 2.9kwh பேட்டரியை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.
எனவே, புதிய சேட்டக் மாடல் அதிகபட்சமாக ரேஞ்ச் 90-110 கிலோமீட்டருக்கு குறைவாக வழங்கக்கூடும் என எதிர்பார்ப்பதுடன் ஆஃப் போர்டு சார்ஜிங் கேபிள் 650 வாட்ஸ் வழங்கப்படும் அல்லது அதற்கு குறைவாக இருக்கலாம். இதன் மூலம் சார்ஜிங் நேரம் மாறுபடலாம். அதிகபட்ச வேகம் தொடர்ந்து மணிக்கு 63 கிமீ ஆக இருக்கலாம்.
தற்பொழுதுள்ள மாடலில் ரிமோட் கீ வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாற்றாக வழக்கமான பிசிக்கல் கீ கொடுக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறு பல்வேறு வசதிகளை குறைத்து விலையை ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை மலிவாக கிடைக்கலாம். எனவே, Chetak Chic விலை ரூ.1,00,000 -ரூ.1,05,000 லட்சத்துக்குள் அமையலாம்.
- 2024 Chetak Urbane – ₹ 1,23,319
- 2024 Chetak Urbane – ₹ 1,47,243
(எக்ஸ்ஷோரூம்)