சுதேச பாரம்பரிய தமிழ் மருத்துவத்தின் உயர் கல்வி நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் ஆர் சிறி கிரிஸ்ணன் தலைமையிலான சுதேச வைத்தியர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுடன் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் இன்று (06) திகதி இடம் பெற்றது.
இதன் போது மாவட்டத்தில் சுதேச பாரம்பரிய மருத்துவத்தினை அபிவிருத்தி செய்தல் தொடர்பாகவும், மூலிகை தோட்டம் அமைத்தல் மற்றும் சுதேச மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையால் மேற்கொண்டனர்.