சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம் (55) , இவரின் மனைவி பத்மினி (52). இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். எண்ணூரில் உள்ள தனியார் கம்பெனியில் செல்வம் வேலை செய்து வந்தார். விருப்ப ஓய்வு பெற்ற அவர், வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்து வருகிறார். இந்நிலையில் செல்வத்துக்கும் அவரின் மனைவி பத்மினிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வம், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து பத்மினியை சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். பின்னர் மனமுடைந்த செல்வம், அந்தக் கத்தியை எடுத்து தனக்குத் தானே குத்தினார். இதில் அவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அதனால் இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பத்மினி உயிரிழந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் செல்வம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பத்மினியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வத்திடம் என்ன நடந்தது என்று போலீஸார் விசாரித்து வருகிறார்கள். சிகிச்சைக்குப்பிறகு செல்வத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர். மனைவியைக் கொலை செய்து விட்டு கணவர், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் வடசென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88