திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). தொழிலதிபரான இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராகவும் இருந்து வந்தார். கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றவர் இரண்டு நாட்களுக்குப் பின் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் ஜெயக்குமார் தனசிங் எழுதிய இரண்டு கடிதங்கள் சிக்கியதை அடுத்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். இது தொடர்பாக ஜெயக்குமார் கடிதத்தில் […]