ஐபிஎல் 2024 மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய சரிவாக இருந்து வருகிறது. புள்ளி பட்டியலில் 9வது மற்றும் 10வது இடங்களை நிர்வகித்து வரும் மும்பைக்கு இன்னும் பிளேஆஃப் செல்லும் வாய்ப்பு உயிருடன் உள்ளது. ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சாம்பியனான மும்பை அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி பெற்றுள்ளது. புள்ளிபட்டியலில் 10வது இடத்தில் இருந்த மும்பை, ஹைதராபாத் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் தற்போது 9வது இடத்தில் உள்ளது. மும்பை அணியில் சரியான காம்பினேஷன் அமையாததால் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
This one’s for the Paltan #MumbaiMeriJaan #MumbaiIndians #MIvSRH pic.twitter.com/z76fo13rwN
— Mumbai Indians (@mipaltan) May 6, 2024
இந்த ஆணு குஜராத் அணியில் இருந்து மும்பைக்கு வந்த ஹர்திக் பாண்டியா அணிக்கு உத்வேகம் அளிக்கத் தவறினார். பாண்டியா 2024ல் 10 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 21.89 என்ற சராசரி யில் 197 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் சற்றே அதிகரித்து 150.38 ஆக உள்ளது. பவுலிங்கில் 11 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். ரசிகர்கள் அவர்மீது காட்டும் விமர்சனங்கள் அவருக்கு எதிர்வினையாக அமைந்து இருக்கலாம். இதற்கிடையில், முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவும் இந்த சீசனில் சில போட்டிகளில் பேட்டிங்கில் மோசமான பார்மில் உள்ளார். இதுவரை 12 போட்டிகளில் 330 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக அடித்த சதம் மட்டுமே அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மறுபுறம் காயத்தில் இருந்து மீண்டும் வந்துள்ள சூர்யகுமார் யாதவ் 8 போட்டிகளில் 3 அரை சதங்கள் மற்றும் 1 சதம் உட்பட 334 ரன்கள் அடித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இன்னும் 2 லீக் ஆட்டங்கள் மட்டுமே உள்ள நிலையில், இங்கிருந்து ப்ளேஆஃப்களுக்கு செல்வது மும்பைக்கு மிகவும் கடினமான செயலாக இருக்கும், ஆனாலும் இன்னும் அவர்களுக்கு ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக வெற்றி பெற்றுள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு எதிராக கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
மேலும், பிளேஆஃப்களுக்குச் செல்ல மற்ற அணிகளின் முடிவுகளை நம்பியிருக்க வேண்டும். தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் முதல் 2 இடங்களில் உள்ளனர். மேலும், சன்ரைசர்ஸ் vs சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டியின் முடிவு மும்பைக்கு முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் இரண்டு பேரில் ஒருவர் 12 புள்ளிகளுடன் முடிக்க வேண்டும். இதுதவிர சென்னை அணி தனது மீதமுள்ள மூன்று போட்டிகளையும் இழக்க வேண்டும். இருப்பினும், இது எல்லாவற்றையும் தாண்டி மும்பை அணி 12 புள்ளிகளுடன் பிளே ஆப் செல்ல NRR ஐ நம்பியிருக்க வேண்டும்.