நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வருடா வருடம் மே மாதம் மெட் காலா எனும் ஃபேஷன் நிகழ்ச்சி நடக்கும். பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள், இசை கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், மாடல்கள் புதுமையான உடை அணிந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு அணிந்துவரும் உடைதான் சில நாள்களுக்கு ஹாட் டாபிக்காக இருக்கும்.