நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் முறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று முதல் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை இ – பாஸ் முறையானது அமலுக்கு வந்ததுள்ளது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திற்குள் செல்லும் 13 வழித்தடங்களிலும் இ- பாஸ் சோதனை நேற்று முதல் நடந்து வருகிறது.