ஸ்பீடு 400சிசி பைக்கை அடிப்படையாகக் கொண்டு புதிய மாடலை உருவாக்க ட்ரையம்ப மோட்டார்சைக்கிள் திட்டமிட்டு இருக்கின்றது. அனேகமாக திரஸ்டன் 400 கஃபே ரேசர் ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 125 சிசி சந்தைக்கு மேல் உள்ள பல்வேறு பிரிவுகளில் உள்ள மாடல்களை புதுப்பிக்கவும் அதே நேரத்தில் தனது போர்ட்ஃபோலியோ உட்பட கேடிஎம், டிரையம்ப் என இரு நிறுவனங்கள் மூலம் 250cc-750cc நடுத்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் மிகச் சிறப்பான கவனத்தை வழங்கவும் திட்டமிட்டு இருக்கின்றது.
பஜாஜ்- ட்ரையம்ப் கூட்டணியில் உருவான ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400X வெற்றியை தொடர்ந்து திரஸ்டன் 400 கஃபே ரேசர் பைக்கில் தொடர்ந்து TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
ரெட்ரோ ஸ்டைலை தொடர்ந்து பராமரிக்கும் வவகையில் வரவுள்ள திரஸ்டன் 400 பைக்கில் ஃபேரிங் பேனல்கள் ஆனது மிக ஸ்டைலிஷாக கொடுக்கப்பட்டு ஹெட்லேம்ப் வடிவமைப்பு ஆனது டிரையம்ப் நிறுவன பிரீமியம் ஸ்பீடு டிரிபிள் RR பைக்கிற்கு இணையாக இருக்கலாம்.
விற்பனைக்கு வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக ட்ரையம்ப் திரஸ்டன் 400 பைக்கின் விலை ரூ.2.50 லட்சத்துக்கும் கூடுதலாக அமைந்திருக்கலாம்.