கடந்த 2024 ஏப்ரல் மாதாந்திர விற்பனையில் மிகச் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள டாப் 25 கார்களில் முதலிடத்தை டாடா நிறுவனத்தின் பஞ்ச் மாடல் 19,158 எண்ணிக்கை பதிவு செய்துள்ளது.
அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களில் ஏழு இடங்களில் மாருதி சுசுகி நிறுவன மாடல்கள் உள்ள நிலையில் அடுத்த டாடா, மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் நிறுவனம் மூன்று இடங்களை பகிர்ந்து கொள்கின்றன.
மிக முக்கியமான இடங்களில் தொடர்ந்து மாருதி சுசுகி நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளது குறிப்பாக இந்நிறுவனத்தின் வேகன் ஆர் பிரெஸ்ஸா, டிசையர் ஃபிரான்க்ஸ், பலேனோ, எர்டிகா ஈகோ மற்றும் ஆல்டோ K10, கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இந்த பட்டியலில் பார்க்க வேண்டும் என்றால் மாருதி ஸ்விஃப்ட் காரானது, டாப் 25 இடங்களில் கூட இடம் பெறவில்லை ஏனென்றால் நாளை புதிய மாடல் விற்பனைக்கு வெளியாகின்றது.
ஹூண்டாய் க்ரெட்டா தொடர்ந்து சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. பொதுவாக, எப்பொழுதும் 15 ஆயிரத்திற்கும் கூடுதலான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்து வருகின்ற டாடா நெக்ஸான் இந்த முறை பின் தள்ளப்பட்டு 11 இடத்தில் உள்ளது.
Top 25 cars and suv list
வரிசை | தயாரிப்பாளர் | April ’24 | April ’23 | YoY Growth |
---|---|---|---|---|
1 | டாடா பஞ்ச் | 19,158 | 10,934 | 75% |
2 | மாருதி வேகன் ஆர் | 17,850 | 20,879 | -15% |
3 | மாருதி பிரெஸ்ஸா | 17,113 | 11,836 | 45% |
4 | மாருதி டிசையர் | 15,825 | 10,132 | 56% |
5 | ஹூண்டாய் கிரெட்டா | 15,447 | 14,186 | 9% |
6 | மஹிந்திரா ஸ்கார்ப்பியோ | 14,807 | 9617 | 54% |
7 | மாருதி ஃபிரான்க்ஸ் | 14,286 | 8784 | 63% |
8 | மாருதி பலேனோ | 14,049 | 16,180 | -13% |
9 | மாருதி எர்டிகா | 13,544 | 5532 | 145% |
10 | மாருதி ஈக்கோ | 12,060 | 10,504 | 15% |
11 | டாடா நெக்ஸான் | 11,168 | 15,002 | -26% |
12 | மஹிந்திரா பொலேரோ | 9537 | 9054 | 5% |
13 | ஹூண்டாய் வெனியூ | 9120 | 10,342 | -12% |
14 | மாருதி ஆல்டோ | 9043 | 11,548 | -22% |
15 | கியா சொனெட் | 7901 | 9744 | -19% |
16 | ஹூண்டாய் எக்ஸ்டர் | 7756 | – | – |
17 | மாருதி கிராண்ட் விட்டாரா | 7651 | 7742 | -1% |
18 | டொயோட்டா இன்னோவா | 7103 | 4837 | 47% |
19 | டாடா டியாகோ | 6796 | 8450 | -20% |
20 | கியா செல்டோஸ் | 6734 | 7213 | -7% |
21 | மஹிந்திரா தார் | 6160 | 5302 | 16% |
22 | மஹிந்திரா XUV700 | 6134 | 4757 | 29% |
23 | கியா கேரண்ஸ் | 5328 | 6107 | -13% |
24 | ஹூண்டாய் i20 | 5199 | 6472 | -20% |
25 | டாடா அல்ட்ராஸ் | 5148 | 4658 | 11% |