மகத்தான மனிதர்களை அங்கீகரிக்கும் வகையில் வருடந்தோறும் ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழா நடைபெறும். அந்தவகையில் இந்த வருடத்திற்கான நம்பிக்கை விருது விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இந்த விருது விழாவில் இயக்குநர் கோபி நயினாரிடம் இருந்து அயோத்தி பட இயக்குநர் மந்திரமூர்த்தி டாப் 10 இளைஞருக்கான விருதைப் பெற்றார்.
விருதைப் பெற்றுக்கொண்ட பின் பேசிய மந்திரமூர்த்தி, “ ஒரு நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற சிந்தனை இருந்தது. படம் வெளியான பிறகு எல்லோரும் சொன்னார்கள் சரியான நேரத்தில் மிகச்சரியான படம் வந்திருக்கிறது என்று. இந்தப் படத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை. இந்தப் படம்தான் என்னைத் தேர்ந்தெடுத்தது என்று நம்புகிறேன். படம் மார்ச் 3 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. அயோத்தி படத்தை பொறுத்தவரை ஒரு காமெடி,லவ், சண்டை என எதுவும் இருக்காது. அந்த சமயத்தில் ஒருத்தர் படத்தைப் பார்த்து அழுதுக்கொண்டே திரையரங்கில் இருந்து வெளியே வந்தார். அவர்தான் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் என நினைக்கிறேன். அந்த மனிதரின் உணர்வுதான் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. அவரை தேடிக்கொண்டு இருக்கிறேன். இப்போதுவரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை” என்று சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
மந்திர மூர்த்தி பேசியதை முழுமையாகக்காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.